வளைகுடா செய்திகள்

30 நாட்களுக்கு விசிட் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் | 15 சேவைகளை மேம்படுத்துவதாக ICA தகவல்

30 நாட்களுக்கு விசிட் விசா

30 நாட்களுக்கு விசிட் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், சுங்கம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம் (ICA), அதன் ஸ்மார்ட் சேவைகள் அமைப்பின் மூலம் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதாக அறிவித்து அதற்கான புதுப்பிப்புகளின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய தொகுப்பில் விசிட், ரெசிடென்ஸி உள்ளிட்ட விசாக்களுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாலை மற்றும் ஐலேண்ட்களை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை || ஒரு மணி நேரத்திற்கு 6,000 பயணங்கள்

ICA-வானது கடந்த பிப்ரவரி 1, 2023 இல் அதன் ஸ்மார்ட் சேவை அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட 15 சேவைகளின் பட்டியலை ஏற்றுக்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளில் ரெசிடென்ஸி விசாக்களை புதுப்பிப்பதற்கான மாற்றங்களும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

See also  UAE: துபாய் - பெங்களூரு இடையே மிகப்பெரிய எமிரேட்ஸ் விமானம் இயக்க இருப்பதாக அறிவிப்பு..! | Khaleej Tamil

30 நாட்களுக்கு விசிட் விசா

அதனடிப்படையில் 90 நாள் விசிட் விசாவை வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு முறை மீண்டும் 30 நாட்களுக்கு விசிட் விசாவை நீட்டிப்பு செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்துவது இந்த முக்கிய புதுப்பிப்புகளில் ஒன்றாகும்.

மேலும், ரெசிடென்ஸி விசாவிற்கான செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்கும் அதிகமாக இருந்தால் விசாவை புதுப்பித்தலுக்கு புதிய நடைமுறையின்படி தடை விதிக்கப்படும்.

மேலும் ஒரு உறவினர் அல்லது நண்பரின் விசிட் விசாவை 30, 60 மற்றும் 90 நாட்களுக்கு ஒரு முறை நுழைவு (single entry) அல்லது பல முறை நுழைவிற்கு (multiple entries) நீட்டித்தல் மற்றும் விசாக்களின் முன் நுழைவு செல்லுபடியை (pre entry validity) நீட்டிக்கும் சேவைகளும் இந்த பட்டியலில் அடங்கும்.

See also  அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அடுத்து வரவிருக்கும் தொடர் பொதுவிடுமுறை..! | Khaleej Tamil

சமீபத்தில் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடியின் விலையில் சேர்க்கப்பட்ட 100 திர்ஹம்ஸ் ஸ்மார்ட் சேவைக் கட்டணமும் அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

அது போலவே 6 மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களுக்கான சேவையை ஸ்மார்ட் சிஸ்டத்தில் ICA இணைத்துள்ளது.

60 நாட்கள் மற்றும் 180 நாட்களுக்கு சிங்கிள் என்ட்ரி அல்லது மல்டி என்ட்ரி என சுற்றுலா, சிகிச்சை மற்றும் நோயாளியுடன் இருப்பதற்காக அமீரகத்திற்கு வருகை தரும் குடும்பத்திற்கு விசா வழங்குவதற்கான சேவை ஸ்மார்ட் சிஸ்டத்தில் உள்ள பிற புதுப்பிப்புகளில் அடங்கும்.

First Electric Bus Service Launched in Saudi Arabia

புதுப்பிக்கப்பட்ட சேவைகளில் சில வகையான ரெசிடென்ஸி தொடர்பான தொழில்களின் வகைப்பாட்டுடன் இரட்டையர்களின் ரெசிடென்ஸி தரவை திருத்துவதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

See also  "துபாயில் எனக்கு பிசினஸ் இருக்கு".. அமெரிக்க பெண்ணிடம் போலி நாடகமாடிய "ஆசிய நாட்டை" சேர்ந்த நபர் - நம்பி சென்ற பெண்ணிடம் 2,50,000 டாலர் அபேஸ்! | UAE Tamil Web
30 நாட்களுக்கு விசிட் விசா
30 நாட்களுக்கு விசிட் விசா

அதே போல் எமிரேட்ஸ் ஐடி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட GCC நாடுகளின் குடிமக்களுக்கான விசா தகவலை ரத்து செய்வதற்கும் திருத்துவதற்கும் ICA புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ICA-வின் அதிகாரியான மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி கூறுகையில் “ஸ்மார்ட் சேவைகளின் வளர்ச்சியானது எதிர்காலத்திற்கான அதன் கண்ணோட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு புதிய செயல்முறையை பிரதிபலிக்கிறது.

அரசாங்கங்களின் எதிர்கால வழிகாட்டுதல்களைப் படிப்பது, வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்துகொள்வது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எளிதான மற்றும் விரைவான வழிகளில் அவர்களைச் சந்திப்பதையும் இது குறிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button